கொரோனா கட்டுப்பாடுகள்: அவுஸ்திரேலியாவில் நுழைய முடியாமல் தவிக்கும் 8 ஆயிரம் அகதிகள்

16 கொரோனா கட்டுப்பாடுகள்: அவுஸ்திரேலியாவில் நுழைய முடியாமல் தவிக்கும் 8 ஆயிரம் அகதிகள்

அவுஸ்திரேலியாவின் கொரோனா பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மனிதாபிமான விசாக்கள் பெற்ற சுமார் 8 ஆயிரம் அகதிகள் அவுஸ்திரேலியா வுக்குள் நுழைய முடியாமல் தவித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

அவுஸ்திரேலிய குடியுரிமையைக் கொண்டவர்கள், நிரந்தரமாக வசிக்கும் உரிமை  பெற்றவர்கள் பயண விலக்கு வழங்கப்படுவது போல மனிதாபிமான விசாக்கள் பெற்றவர்களுக்கு அவுஸ்திரேலிய அரசு பயண விலக்கு வழங்கவில்லை. இதனால் ஆயிரக் கணக்கான அகதிகள் தொடர்ந்து அச்சுறுத்தலான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இப்புகைப்படத்தில் உள்ள நுர்ஹூசைன் குடும்பத்தினர் அவுஸ்திரேலியா வுக்குள் நுழைய கடந்த ஆண்டு மனிதாபிமான விசாக்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா பயணக் கட்டுப்பாடுகளினால் அவர்கள் சூடானிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 கொரோனா கட்டுப்பாடுகள்: அவுஸ்திரேலியாவில் நுழைய முடியாமல் தவிக்கும் 8 ஆயிரம் அகதிகள்