Home உலகச் செய்திகள் வூஹானில் அதிகரிக்கும் கொரோனா- பரிசோதனைகளை தீவிரப்படுத்தும் சீனா

வூஹானில் அதிகரிக்கும் கொரோனா- பரிசோதனைகளை தீவிரப்படுத்தும் சீனா

1592293508756 வூஹானில் அதிகரிக்கும் கொரோனா- பரிசோதனைகளை தீவிரப்படுத்தும் சீனா

சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கோவிட்-19 பரிசோதனை நடத்த அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டின் இறுதியில் உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று இங்குதான் கண்டறியப்பட்டது.

வூஹானில் ஓராண்டுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் பாதிக்கப்பட்டது கண்டறியப்படாத சூழலில், தற்போது ஏழு பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் உள்நாட்டிலேயே நோய் பரவல் நிகழ்ந்துள்ளது.

மேலும் சீனாவில் கடந்த 10 நாட்களில் சுமார் 300 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள 15 மாகாணங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெருந்திரளான மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது மற்றும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சீன அரசு இறங்கியுள்ளது.

Exit mobile version