இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா: நாளொன்றுக்கு 15 முதல் 30 வரையிலான மரணங்கள் பதிவு

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா

கடந்த இரண்டு தினங்களாக இலங்கையில் நாள் ஒன்றுக்கு 700 கோவிட் தொற்றாளர்கள்   பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக நாளொன்றுக்கு 15 தொடக்கம் 30 வரையிலான மரணங்கள் பதிவாகுவதாகவும்  70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டின் மொத்த சனத்தொகையில் கோவிட்  தடுப்பூசி ஏற்றுவதற்கு தகுதியான மக்கள் தொகையில் 84 வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

ஏனைய நாடுகளில் தடுப்பூசி ஏற்றப்பட்ட விகிதாசாரத்தை விட இந்த விகிதாசாரம் கூடிய அளவாக பதிவாகியுள்ளதாகவும் தற்போது பூஸ்டர் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளதுடன்  60 வயது மேற்பட்ட தடுப்பூசி பெற சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வர முடியாதவர்களுக்கு நடமாடும் சேவை  மற்றும் வீடுகளுக்குச் சென்று  தடுப்பூசி ஏற்றும்  செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய சுகாதார அமைச்சின் திணைக்களங்கள் இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்  கூறப்படுகின்றன.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா: நாளொன்றுக்கு 15 முதல் 30 வரையிலான மரணங்கள் பதிவு