Home உலகச் செய்திகள் புலம்பெயர் சமூகங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பெருந்தொற்று

புலம்பெயர் சமூகங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பெருந்தொற்று

கொரோனா பெருந்தொற்று

அவுஸ்திரேலியா மற்றும் உலகெங்கும் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் மீது கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ரெட் கிராஸ் கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“இந்த பெருந்தொற்று சூழலின் போது மிகப் பெரிய பாதிப்புகளை எதிர்கொள்பவர்கள் சமூகத்தால் மிகவும் புறக்கணிக்கப்பட்ட மக்களாக இருந்துள்ளனர்,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் ரெட் கிராஸ் கூட்டமைப்பு  நடத்திய ஆய்வில், ரெட் கிராஸ் உதவிகளை பெற்ற 83 சதவீதமான புலம்பெயர்ந்தவர்கள் தங்களது அடிப்படை உணவு தேவைகளுக்காகவே அவசர உதவிகளை கோரியிருப்பது தெரிய வந்துள்ளது.

அதே போல், 86 சதவீதமான தற்காலிக விசாவாசிகள் வீடற்ற நிலையை எதிர்கொள்ளும் ஆபத்தில் உள்ளனர். இவர்கள் வசிப்பிடத்தை பாதுகாத்துக் கொள்ள அவர்கள் பொருளாதார உதவிகளை கோருவதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

“புலம்பெயர்ந்தவர்கள் தங்களது வேலைகளை அல்லது வாழ்வாதாரத்தை இழப்பில் முதலிடத்தில் உள்ளனர். அதுவே சமூக பொருளாதார உதவிகளை பெறுவதில் புலம்பெயர்ந்தவர்கள் கடைசி இடத்தில் இருக்கின்றனர்,” என ரெட் கிர்ஸ் உலக புலம்பெயர் ஆய்வகத்தின் மூத்த ஆலோசகர் நிக்கோலே ஹோக்லேண்ட் தெரிவித்துள்ளார்.

Exit mobile version