Home செய்திகள் திருகோணமலை: இயற்கை உரம் இன்மை- வாழ்வாதாரத்தை இழக்கும் சோளச் செய்கையாளர்கள்

திருகோணமலை: இயற்கை உரம் இன்மை- வாழ்வாதாரத்தை இழக்கும் சோளச் செய்கையாளர்கள்

வாழ்வாதாரத்தை இழக்கும் சோளச் செய்கை

திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மஜீத் நகர் வெல்லாங்குள சோளச் செய்கையாளர்கள் இம் முறை விளைச்சலின்றி நஷ்டம் அடைந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

போதிய பசளை இன்றி  சோளச் செய்கை வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் தங்களது வாழ்வாதாரமாக சோளச் செய்கையை நம்பியே வாழ்ந்து வருவதாகவும், வாழ்வாதாரத்தை இழக்கும் சோளச் செய்கை செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பல இலட்சம் ரூபா முதல் செய்து செய்கையில் ஈடுபட்ட போதும் உரிய பயன் கிடைக்கவில்லை. ஒரு கிலோ சோள விதை ரூபா 1750. ஆனாலும் பல ஏக்கரில் இச் செய்கையினை மேற்கொண்ட போதும் விளைச்சல் கிட்டவில்லை.  மேலும் இந்த முறை பசளை இன்மையால் பாரிய பொருளாதார பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளோம் எனவும் சோளச் செய்கையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எனவே தங்களுக்கான இழப்பீட்டினை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அவர்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்.

Exit mobile version