தமிழர்களிடையே தொடரும் தஞ்சக்கோரிக்கை பயணங்கள்?

தமிழர்களிடையே தொடரும் தஞ்சக்கோரிக்கை

கடந்த நவம்பர் 9ம் தேதி இலங்கையிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயன்றதாக 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

இவர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, நீர்கொழும்பு, கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனப்படுகின்றது. இப்பகுதிகளில் பெரும்பாலானவை தமிழர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளாகும். வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்த 19 பேரை வேனில் அழைத்து வந்த ஓட்டுநரையும் அவரது உதவியாளர் ஒருவரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்கள் அச்சுறுத்தல் எதிர்கொள்வதன் காரணமாக, தமிழர்களிடையே தொடரும் தஞ்சக் கோரிக்கைக்காக இவ்வாறான படகுப் பயணங்கள் தொடர்கின்றதா என்ற சந்தேகம் முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறு இலங்கையிலிருந்து வெளியேறுபவர்கள் செல்லக்கூடிய இடங்களில் முதன்மையான பட்டியலில் இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ரியூனியன் தீவு ஆகியவை உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு, படகு மூலம் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைபவர்களை முழுமையாக நிராகரித்து திருப்பி அனுப்பவும் அல்லது நாடு கடத்தவும் செய்கிறது.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad தமிழர்களிடையே தொடரும் தஞ்சக்கோரிக்கை பயணங்கள்?