Tamil News
Home செய்திகள் பாவனையாளர் பாதுகாப்பு சட்ட மீறல்;யாழில் 373 வழக்குகள்

பாவனையாளர் பாதுகாப்பு சட்ட மீறல்;யாழில் 373 வழக்குகள்

யாழ் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் சட்டத்தை மீறிய 373 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ் மாவட்ட இணைப்பதிகாரியும் வட மாகாண பதில் உதவிப்பணிப்பாளருமாகிய அப்துல் லத்தீப் ஜஃபர் ஸாதிக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில் இவ் வழக்குகள் காலாவதி, விலைப்பட்டியலின்மைஇ உத்தரவாதம் இன்மைஇ இறக்குமதி விபரமின்மை,  தரச்சான்றுதல் இன்மை, கட்டுப்பாட்டு விலையினை மீறியமை,பொறிக்கப்பட்ட விலையினை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பான காரணங்களுக்காக பதியப்பட்டன என்றும் தெரிவித்தார்.

இவ் அரையாண்டு காலப்பகுதியில் யாழ் மாவட்ட எல்லைக்குட்பட்ட நீதவான் நீதிமன்றங்களில் ஜனவரி மாதம் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 102 வழக்குகளுக்கு ரூபா 497,000 தண்டப்பணமாக கிடைக்கப்பெற்றது.

பெப்ரவரி மாதம் 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 78 வழக்குகளுக்கு தண்டப்பணமாக ரூபா 357000 கிடைக்கப்பெற்றது. மார்ச் மாதம் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 வழக்குகளுக்கு தண்டப்பணமாக ரூபா 164500 கிடைக்கப்பெற்றது.

ஏப்ரல் மே மாதங்களில் ஊழஎனை 19 காரணமாக வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை யூன் மாதம் 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 வழக்குகளிற்கு தண்டப்பணமாக ரூபா 418000 கிடைக்கப்பெற்றது.

மொத்தமாக அரையாண்டு காலப்பகுதிக்கு 318 வழக்ககள் பதிவுசெய்யப்பட்டு 307 வழக்குகள் நிறைவு பெற்று தண்டப்பணமாக ரூபா 1,436,500 கிடைக்கப்பெற்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version