மாலைதீவில் கட்டட நிர்மாணப் பணிக்கு மணல் ஏற்றுமதி

மாலைதீவில் கட்டட நிர்மாணப் பணிமாலைதீவில் புதிய தீவு ஒன்றை நிரப்புவதற்காக இலங்கையில் இருந்து மணல் ஏற்றுமதி செய்யப்படவில்லை. ஆனால் மாலைதீவில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனம் ஒன்றுக்கு தேவையான வர்த்தக ரீதியிலான மணல் தொகை மாத்திரம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக  புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் நாயகம் சஜ்ஜன டி சில்வா அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், குறித்த மணலானது குழாய் இணைப்பு மற்றும் நீர்நிலைகளை நிரப்புவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.

அதற்காக 8 க்யுப் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், க்யுப் ஒன்றுக்கு 180,000 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் அறவிடப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.