Home செய்திகள் அரசியலமைப்பின்படி 30 பேர்களுடன் அமைச்சரவை மட்டுப்படுத்தப்படும்! ஜனாதிபதி கோட்டாபய

அரசியலமைப்பின்படி 30 பேர்களுடன் அமைச்சரவை மட்டுப்படுத்தப்படும்! ஜனாதிபதி கோட்டாபய

30 பேர்களுடன் அமைச்சரவைஅரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 பேர்களுடன் அமைச்சரவை மட்டுப்படுத்துவேன் எனவும், அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் வேலைத்திட்டம், நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒரே குழுவாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து பின்னடைவுகளையும் குழுவாக நிவர்த்தி செய்வது கூட்டுப் பொறுப்பாகும்.

குறைபாடுகளை மாத்திரம் விமர்சித்தால் அது குறித்த நபரின் திறமையின்மையையே வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மக்கள் சார்பாக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்

Exit mobile version