Home உலகச் செய்திகள் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் – பாதுகாப்புச் சபை

மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் – பாதுகாப்புச் சபை

மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்

எதியோப்பியாவில் இடம்பெற்றுவரும் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு மனிதாபிமான உதவிகள் விநியோகிக்கப்படுவதற்கான ஏதுநிலைகள் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த பல வருடங்களாக இடம்பெற்றுவரும் போரினால் ரிக்கரி பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் எனவே எல்லா தரப்பினரும் மோதல்களை நிறுத்த வேண்டும் என பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.

அமைதி மற்றும் உறுதித்தன்மைக்கான அடிப்படை ஒன்று அங்கு உருவாக்கப்பட வேண்டும் என வட ரிக்கிரி பகுதியில் போர் ஆரம்பமாகிய ஒரு வருடத்தின் பின்னர் இடம்பெற்ற 15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பாதுகாப்புச்சபை கூட்டத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடமாக இடம்பெற்றுவரும் மோல்களில் அங்கு பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

ரிக்கரே படையினர் தலைநகருக்கு செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளை அண்மையில் கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு மோல்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது.

அங்குள்ள 5.2 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாக தேவை என ஐ.நாவின் செயலாளர் நாயகம் அன்ரொனியோ குற்ரறெஸ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version