Home செய்திகள் இலங்கையில் வசிக்க முடியாத நிலை – தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள் வாக்குமூலம்

இலங்கையில் வசிக்க முடியாத நிலை – தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள் வாக்குமூலம்

இலங்கையில் வசிக்க முடியாத நிலை

பொருளாதா நெருக்கடி காரணமாக இலங்கையில் வசிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதால் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக தப்பி வந்துள்ளதாக இன்று அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்திருந்த ஈழத்தமிழ் குடும்பம் வாக்கமூலமளித்துள்ளது.

தலைமன்னாரை சேர்ந்த ஒரு குடும்பம் படகு மூலம் தமிழ்நாட்டிற்கு புறப்பட்ட நிலையில் இன்று அதிகாலை தனுஷ்டகோடியை சென்றடைந்திருந்தனர்.

இவ்வாறு தனுஷ்கோடிக்கு சென்ற 2வயது சிறுவன் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் இந்திய கடலோர காவல்படையினரால் விசாரனைக்காக அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அங்கு வாழமுடியாத நிலையேற்பட்டுள்ளது. இதன்காரணமாகவே தமிழ்நாட்டிற்கு தப்பி வந்துள்ளதாக இதன்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டம் முத்தரிப்புத்துறை பகுதியை சேர்ந்த கிஷாந்தன் (வயது-34), ரஞ்சிதா (வயது-29), ஜெனீஸ்டிக்கா (வயது-10) மற்றும் இரண்டரை (2- 1ஃ2)வயது சிறுவன் ஆகாஷ் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரே இவ்வாறு தமிழ்நாட்டிற்கு அகதிகளாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version