Tamil News
Home செய்திகள் சமூக ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுவது குற்றம்: அரச ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

சமூக ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுவது குற்றம்: அரச ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில், அரச ஊழியர்கள் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுவதை வரையறுத்து பொது நிர்வாக அமைச்சு விசேட சுற்றுநிருபமொன்றை   வௌியிட்டுள்ளது.

நிறுவனங்கள் சட்டக்கோவையின் ஏற்பாடுகளை பின்பற்றாமல், சமூக ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுவது அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக பொது நிர்வாக சுற்றுநிருபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளக்கூடியவாறான குற்றம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் சட்டக்கோவையின் பிரகாரம், அரசியல் உரிமைகளுக்கு உரித்து அற்ற உத்தியோகத்தர் ஒருவர் சமூக ஊடகங்கள் ஊடாக கருத்து வௌியிடுவதும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய குற்றமாகும் என அந்த சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version