வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு

நாடு முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் | தினகரன்14ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை (18)  முள்ளிவாய்க்கால் முற்றத்தில்  உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வியாழக்கிழமை (18) உணர்வு பூர்வமாக தமிழ் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்வேறு நினைவேந்தல்கள் இடம் பெற்று வரும் நிலையில்,  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் வியாழக்கிழமை (18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம் பெற்றது.

மன்னாரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் (Photos) - ஜே.வி.பி நியூஸ்

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மெசிடோ நிறுவனத்தின் அனுசரணையில்  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் தமிழின படுகொலை அஞ்சலி நிகழ்வுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! - tamilnaadi.com

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை மே 18 முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

கொழும்பில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பரபரப்பு : கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு ! | Virakesari.lk

அதே நேரம் கொழும்பு பொரளைப் பகுதியில் காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! - ஜே.வி.பி நியூஸ்

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால்   யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தூபியில் இடம்பெற்றது.

கிளிநொச்சியில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Virakesari.lk

கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில்   நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வு .