Home செய்திகள் மன்னாரில் மாவீரர் நாள் நினைவேந்தல்: தடைகோரி தாக்கல் செய்த மனு நீதிமன்றால் நிராகரிப்பு

மன்னாரில் மாவீரர் நாள் நினைவேந்தல்: தடைகோரி தாக்கல் செய்த மனு நீதிமன்றால் நிராகரிப்பு

மன்னாரில் மாவீரர் நாள் நினைவேந்தல்

மன்னாரில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நாளை நடத்த உள்ளதாக கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மன்னார்  காவல் நிலைய பொறுப்பதிகாரியினால் இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மன்னார் நீதவான் நிராகரித்துள்ளார்.  

தமக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் நாளைய தினம்  மன்னாரில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், எனவே பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன் , மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,உப தவிசாளர் எஸ்.ஜாட்சன், நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகிய 6 பேருக்கும் எதிராக தடை விதிக்க கோரி இன்றைய தினம் மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரியினால் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில்  மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட  நீதவான், போதிய சாட்சிகள்  மன்றில் சமர்ப்பிக்கப்படாமையினால்  குறித்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version