Home செய்திகள் லண்டனில் கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு நினைவேந்தல்

லண்டனில் கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு நினைவேந்தல்

WhatsApp Image 2022 07 23 at 11.14.18 PM 1 லண்டனில் கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு நினைவேந்தல்

கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள், தமிழர்களை கொடுமைப்படுத்தியும், அவர்களின் சொத்துகளை அழித்தும் , 3000 பேர் வரை படுகொலை செய்தும்  ஒரு பெரும் தமிழின அழிப்பை நிகழ்த்திய கோரமான நிகழ்வாகும். இந்த வன்முழைற நடந்து 39 ஆண்டுகள் கடந்து விட்டது.

இந்நிலையில், நேற்று  லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் லண்டனில் கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டது.

10 Downing வீதி முன்பாக பல வீதிகள் மாறுபட்ட போராட்டங்கள் காரணமாக முடக்கப்பட்ட நிலையிலும் நூற்றுக்கணக்கான மக்களுடன் கண்டன போராட்டமும் அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றன.

Exit mobile version