விலை மதிக்க முடியாத பார்வையினை கொடுத்தவர் வாழ்வில் ஒளியேற்ற முன்வாருங்கள் – மகிந்தன்

வாழ்வில் ஒளியேற்ற முன்வாருங்கள்யுத்த காலப் பகுதியாக இருந்தாலும் சரி, இடைக் கால நிர்வாக முன்னெடுப்புக் காலப் பகுதியாக இருந்தாலும் சரி விசேட தேவையுடையோர் அவர்களுக்குரிய காப்ப கங்களில், உரிய முறையில் பராமரிக்கப் பட்டு வந்தனர். இதில் நவம் அறிவுக்கூடம், இனியவாழ்வு இல்லம், செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச் சோலை, வெற்றி மனை, சந்தோசம், நிறைவாணி காப்பகம், எழுகை, எழுச்சிப் பாதை என பல்வேறு காப்பகங்கள் நிழல் அரசாங்க நிர்வாகத்தி னரால் நேர்த்தியாக இயக்கப்பட்டு வந்தன.

வாழ்வில் ஒளியேற்ற முன்வாருங்கள்வாழ்வில் ஒளியேற்ற முன்வாருங்கள்தற்போது இத்தகைய காப்பகங்கள் பல இராணுவ முகாம் களாகவும், வேறு தேவைகளுக்கான பயன்பாட்டு கட்டடங் களாகவும் ஆக்கிரமிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. குறிப்பாக நவம் அறிவுக் கூடத்தில் பராமரிக்கப் பட்டவர்கள் நிர்க்கதியாகி இருக்கின்றார்கள். இந்தக் காணிப் பகுதிகள் கண் பார்வை அற்றவர்களின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வளாகத்தின் உள்ளே ஒரு பார்வையற்ற பெண்ணின் வீடும் அமைந்துள்ளது. இந்தப் பராமரிப்பு நிலையம் இராணுவ முகாமாக ஆக்கிரமிக்கப் பட்டு, இப்பொழுது கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையமாக மாற்றப் பட்டுள்ளது. நிர்க்கதியான பார்வை அற்றவர்களை உள்ளூர் நிறுவனங்கள் நாட்டின் பயங்கர சூழ்நிலையின் பயத்தால் பொறுப்பேற்க மறுத்தார்கள். இதனால் அவர்களை அரவணைத்து ஏனைய காரணி களால் பார்வை இழந்தவர்களையும் அரவணைத்து வன்னி விழிப்புலனற்றோர் சங்க மானது உருவாக்கப்பட்டது.

வாழ்வில் ஒளியேற்ற முன்வாருங்கள்இதன் ஆரம்ப காலகட்டங்களில் ஒரு கடைக் கான கட்டடத்தை வாடகைக்கு எடுத்து, அதி லிருந்து நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன. “பசி வந்தால் பத்தும் பறந்து போகும்” என்பார்கள். முதலில் பசி போக்கு வதற்கான நிவாரண நடவடிக்கைகளே இங்கு மேற் கொள்ளப்பட்டன. சில கொடையாளிகள் முன்வந்து  உலர் உணவுப் பொதிகளை அவ் வப் பொழுது வழங்கி வைத்தார்கள். தொடர்ந்து சிறிய சிறிய வாழ்வாதாரத் திட்டங் கள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அடிப்படைத் தேவைகளுக்கான உதவிகள் இயலுமானவரை மேற் கொள்ளப்பட்டன. பின்னர் மருத்துவ தேவைகள், போக்குவரத்து தேவைகள், துணைக் கருவிகள் வழங்கல் போன்ற செயற்பாடுகளும் விரிவுபடுத்தப்பட்டன.

இயலாமை

அதன் பின்னராக பார்வையற்ற குடும்பங்களின் பிள்ளைகளுக்கான கல்வி அபிவிருத் தித் திட்டத்தை முன்னெடுத்தது. அதன் பின்னராக பண்ணைத் திட்டங்கள் முன்னெ டுக்கப்பட்டன. இயலாமை, குடும்ப, சமூக, ஆளும் நிர்வாக  ஒத்துழைப்பின்மை, வாழ் வாதார செயற் திட்டங்களில் பின்னடைவை ஏற்படுத்தியது. இயலாமை என்பது யுத்த த்தினால் கடும் காயங்களுக்கு உள்ளாகி நிலையான பார்வையிழப்புடன், ஏனைய அவயவ இழப்புகளையும் பார்வையற்றவர்கள் கொண்டிருப்பதால், அவர்களின் இய லாமை தொழில் முயற்சியில் தடைகளை ஏற்படுத்தின. ஒருபார்வையற்றவரால் தனி த்து இயங்குவது சாத்தியமில்லை. பக்கத்தில் பாம்பு வந்தாலும் தெரியாது.

குடும்பச் சுமையுடன் இவர்களின் தேவையும் குடும்ப அங்கத்தவர்களாலேயே பார்க் கப்பட வேண்டியிருந்ததால், குடும்ப விரிசல்களே அதிகரித்தன. சமூக ஒத்துழை யாமை என்பது ஒரு பார்வையற்றவரின் இயலுமை, அவருக்கு உண்டான வளம் என் பன ஆராயப்பட்டு, ஏற்ற  முழுமையான செயற் திட்டத்தினைத் தயாரித்து அதற்கு உதவுவதை விடுத்து, பலர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விலை மதிக்க முடியாத பார்வையினை விலையாகக் கொடுத்தவர்களை தங்கள் விளம்பர எதிர்பார்ப்பிற்காக சிறிய உதவி செய்து விட்டு இணையங்களில் காட்சிப் படுத்தினார்கள். இன்னும் பலர் இவர்களின் ஊனத்தை விற்று பிழைப்பு நடத்தினார்கள். இன்னும் பலர்  காசிக்கு சென்று புண்ணியம் தேடிக் கொள்வது போல் ஒருநேர உணவளித்தார்கள். நிலமை ஆடு புலியாட்டமாக மாறியது. ஒரு கொடையாளியிடமிருந்து எவர், எப்படி பணத்தை வாங்கியெடுப்பது என்ற போட்டி உருவாகியது. ஒப்பாரிக் காட்சிகள் நல்ல விலை போனது. இதனால் பலர் சிறந்த நடிகர்களாகவே மாறினார்கள். வித்தை காட்டும் விற்பன்னர்கள் பலர் தம்மை வளப்படுத்திக் கொண்டார்கள். வேறு வழியில்லாமல் பலர் தமக்கு ஒவ்வாத, இயலாத வாழ்வாதாரங்களை வாங்கி விற்று அதில் சிலகாலம் வாழ்வை நடாத்தினார்கள்.

வாழ்வில் ஒளியேற்ற முன்வாருங்கள்சமூகப் பொருளாதார முன்னேற்றம் அபிவிருத்தி யடைந்து செல்கின்றதோ இல்லையோ களவு உள்ளடங்கலாக சமூகச் சீர்கேடுகள் அபிவிருத்தி யடைந்தே செல்கின்றன. இதன் விளைவால் அங்கவீனர் களும் பெரும் பாதிப்படைகி ன்றார்கள். சேற்றில் செந்தாமரை முளைப்பது போல் நல்ல பல கொடையாளிகளும் மலர்ந்தார்கள். நல்ல பல செயற் திட்டங்களையும் முன்னெடுத் தார்கள்.

அந்த வகையில், இப்பொழுது நாம் யுத்தத்தினால் கடும் பாதிப்புற்று, நிரந்தர பார்வை யிழப்பும், அவய இழப்பும் ஏற்பட்ட 32 பார்வையற்ற பயனாளிகளுக்கு வழங்கும் வாழ் வாதார திட்டங்கள் ஏற்புடையதல்ல. ஓய்வூதிய திட்டம் ஒன்றைப்போல் மூதாதையரின் சீவிய உரித்து தற்காப்பு வழியைப் போல் நிரந்தர வைப்பு திட்டத்தை முன்னெடுக்கும் செயற் திட்டத்தினை தாயக மேம்பாட்டுப் பிரிவினரிடம் முன் வைத்தோம். அவர்களும் அதனை ஏற்று இத்திட்டம் முழுமை பெறும் வரை மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் உதவிக் கொடுப்பனவு வழங்குவது எனவும், படிப்படியாக இந்த உதவிக் கொடு ப்பனவை வட்டி வீதத்தினூடாக கிடைப்பதற்கு நிரந்தர வைப்பை ஏற்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி, அதனை செயற்படுத்தி வருகின்றார்கள்.

வாழ்வில் ஒளியேற்ற முன்வாருங்கள்அதேநேரம் பார்வைக் குறைபாடுடைய, தொழில் செய்யக் கூடிய 104 பயனாளிகளு க்கு மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் வருமானத்தை விட அதிக வருமானம் கிடைக்கக் கூடிய, அவர்களுக்கேற்ற வாழ்வாதாரத் திட்டத்தை தயாரித்து, திட்ட கண்காணிப்பாளர் ஒருவரை நியமித்து கொடை யாளிகளின் நன் கொடையில் வாழ்வாதார திட்டங்களை நேர்த் தியாக முன்னெடுத்து வருகின்றார்கள். இத்திட்டங்கள் சிறந்த முறையில் இடம் பெற்று வருவதால் நாளை பார்வையற்ற குடும்பங்களும் கையேந்தும் ஏங்கிய வாழ்விலிருந்து விடுபடுவார்கள் என்ற நம்பிக்கையின் கீற்று தெளிவாகவே தெரிகின்றது.

இச்செயற் திட்டத்தினை விரைவாக செயற்படுத்தி முடிப்பதற்கு உதவு முன்வரும் கொடையாளிகள் தாயக மேம்பாட்டுப் பிரிவினரையோ அல்லது வன்னி விழிப்புல னற்றோர் சங்கத்தின் நிர்வாகத்தினரையோ தொடர்பு கொள்ளலாம். எந்தவித எதிர் பார்ப்பும் இல்லாமல் விலை மதிக்க முடியாத பார்வையினை தமிழர்களின் விடி விற்காக கொடுத்தவர் வாழ்வில் ஒளியேற்ற உதவ முன்வாருங்கள்.விலை மதிக்க மடியாத பார்வையினை கொடுத்தவர் வாழ்வில் ஒளியேற்ற முன்வாருங்கள்

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021