Home செய்திகள் நேற்றிரவு முதல் முடக்கப்பட்டது பருத்தித்துறை நகரப் பகுதி

நேற்றிரவு முதல் முடக்கப்பட்டது பருத்தித்துறை நகரப் பகுதி

pointpedro 1 நேற்றிரவு முதல் முடக்கப்பட்டது பருத்தித்துறை நகரப் பகுதி

பருத்தித்துறை நகரத்தின் இதய பகுதி என்று அழைக்கப்படும் – ஜே/401 கிராம சேவகர் பகுதி நேற்று மாலை முதல் முடக்கப் பட்டது. இந்தப் பகுதியில் நேற்றும் – நேற்று முன் தினமும் மட்டும் 35 கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டனர்.

அத்துடன், தனிமைப்படுத்தப் பட்டவர்கள் பலர் அதனை மீறி வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவற்றையடுத்தே இந்தப் பகுதி சுகாதாரப் பகுதியினரால் முடக்கப் பட்டது.

முடக்கப் பட்ட பகுதியில் தும்பளை வீதியில் 3ஆம் குறுக்குத் தெரு தொடக்கம் மெத்தை கடைச் சந்தி, ஓடக் கரை வீதி, பருத்தித்துறை பஸ் நிலைய நுழை வாயில், பத்திரகாளி அம்மன் ஒழுங்கை, விநாயகர் முதலியார் (வி.எம்.) ஒழுங்கை, துறைமுகப் பகுதி – மூன்றாம் குறுக்குத் தெரு கடற்கரை பகுதி அடங்குகின்றன.

இதனால், இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் நிலையம், தனியார் பஸ் நிலையம், மரக்கறி சந்தை, மீன் சந்தை, வர்த்தக நிலையங்கள், அரச, தனியார் வங்கிகள் என்பனவும் முடங்கியுள்ளன.

பருத்தித்துறை பஸ் நிலையம் முடக்கப்பட்ட போதும் மருதடி பகுதியிலுள்ள இ.போ.ச. சாலையிலிருந்து வழமை போன்று பஸ் சேவைகள் இடம் பெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இதே போன்று, வல்வெட்டித்துறை – ஆதி கோயிலடி பகுதியும் நேற்று அதிகாலை 4 மணி முதல் முடக்கப் பட்டுள்ளது. இந்தப் பகுதியில் நேற்று முன் தினமும் 88 பேர் தொற்றாளர்களாக இனங்காணப் பட்டனர். இதையடுத்தே, மக்கள் செறிந்து வாழும் இந்தப் பகுதி நேற்று அதிகாலை முதல் முடக்கப்பட்டது.

காவலில் படையினர் முடக்கப்பட்ட பருத்தித்துறை நகரம், வல்வெட்டித்துறை – ஆதி கோவிலடி பகுதிகளில் பெருமளவான இராணுவத்தினர் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

தினமும் மட்டும் 35 கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

Exit mobile version