சீன உரக்கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்குள் நுழைய தடை

சீன உரக்கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்குள் நுழைய தடை

இலங்கைக்கு தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் அடங்கிய இயற்கை உரங்களை ஏற்றி வரும் சீன உரக்கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்குள் நுழைய தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார்.

200,000 மெட்ரிக் தொன் இயற்கை உரத்துடன் கப்பல் நாட்டுக்கு வரவிருப்பதாக தாவர தனிமைப்படுத்தல் சேவை நேற்று (22) கொழும்பு துறைமுகத்துக்கு அறிவித்திருந்தது.

இதன்படி, கப்பல் கொழும்புத் துறைமுக எல்லைக்குள் பிரவேசிக்கவில்லை எனவும், கப்பலின் வருகை குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட உர மாதிரிகளில் ‘அர்வினியா’ என்ற நுண்ணுயிரி இருப்பது இரண்டு சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.