Home செய்திகள் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi zhenhong  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பணயம்

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi zhenhong  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பணயம்

இலங்கைக்கான சீனத்தூதுவர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங்
(Qi zhenhong)   மாவட்டத்தில் இன்று  இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.

இதன்போது  இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட  சீன தூதரக அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்ததுடன் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்விலும் கலந்துகொண்டிருந்ததுடன், இந்த இறுக்கமான சூழலில் சீன அரசினால் இலங்கை பூராகவும் வறிய மக்களுக்காக வழங்கப்பட்டு வருகின்ற  உலர் உணவு நிவாரணப் பொதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென 2500 ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்வின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு சீனத் தூதுவரினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டடக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்கள் தொடர்பாகவும் இதன்போது சீனத் தூதுர் அறிந்துகொள்ளும் வண்ணம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் அவர்களினால் அளிக்கை செய்யப்பட்டது.

இதன்போது மாவட்டத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலான திட்டங்களையும் சீனத் தூதுவரிடம் முன்வைத்துள்ளனர்.

இதேவேளை வந்தாறுமூலை – கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இலங்கைக்கான சீனத்தூதுவர் விஜயம் அங்கு சர்வதேச விவகார அலகினையும் திறந்துவைத்த தூதுவர் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டார்.

Exit mobile version