இலங்கையின் வடக்கு நோக்கி நகரும் சீனாவின் பிரசன்னம்: யாரைப் பாதிக்கும்?

சீனாவின் பிரசன்னம்கடந்த பத்து ஆண்டு களுக்கும் மேலாக இலங்கையிலும், இந்தியப் பெருங் கடலைச் சார்ந்தும் சீனாவின் ஆதிக்கம் ஓங்கி வருவது நமக்குத் தெரிந்ததே. குறிப்பாக 2009ஆம் ஆண்டு ஆயுதப் போரிற்குப் பின் தமிழர்களின் இருப்பிடமும், அவர்களின் அரசியல் மற்றும் அதிகாரமும் சிங்கள அரசாங்கத்தின் முழுமையான கட்டுப் பாட்டுக்குள் வந்தது. அதனை அடுத்து  சீனா, தன்னுடைய ஆதிக்கத்தைப் பொருளாதார ரீதியாகவும், கட்டுமானப் பணிகள் ஊடாகவும் தனது நகர்வுகளை இலங்கையில் முன்னெடுத் துள்ளது. அதன் அடிப்படையில் தான் அம்பாந்தோட்டைத்  துறைமுகம், கொழும்புத் துறைமுக நகரம், வடக்கில் உல்லாச விடுதிகள் கட்டுமானப் பணிகளை மேற் கொண்டுள்ளது. அத்தோடு இலங்கையின் வடக்கிற்கும், இந்தியாவின் தமிழகத்திற்கும்  அருகாமையில் எரிசக்தி எண்ணெய் கிணறுகள் சார்ந்த முதலீடுகள் என பல வகையான பொருளாதாரக் கட்டுமான, இராணுவ நடவடிக்கைகளை சீனா மேற் கொண்டுள்ளது.

சீனாவின் பிரசன்னம்3

இந் நிலையில், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம், தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் எத்தகைய அச்சுறுத் தல்களை உருவாக்கலாம் என்பது தொடர்பான விளக் கம் ஒன்றைப் பெறுவதற்காக சென்னை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியைச் சேர்ந்தவரும், பாரதி புத்தகா லய பதிப்பாசிரிய ருமான, ப.கு.ராஜன் அவர்களிடம் ‘இலக்கு’ ஊடகத்தினர் நேர்காணல் ஒன்றைப் பெற்றி ருந்தனர்.

 

கேள்வி:
இலங்கையின் தென் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வரும் சீனாவின் பிரசன்னத் தினால் தமிழகத்தில் நிகழும் ‘நன்மை’  என்ன?’
பதில்:
மிகவும் சிக்கலான கேள்வி. இன்று தமிழ் நாட்டிலும், ஈழத் தமிழ் பகுதியிலும் வாழும் அனைவருமே சிந்திக்க வேண்டிய கேள்வி தான். ’தமிழகத்தில் நிகழும் நன்மை என்ன?’ என்ற கேள்வி நன்மை தான் என முடிவு செய்து கேட்கப் பட்டுள்ளதா என எனக்குத் தெரிய வில்லை. நான் ’தாக்கம் என்ன’ என்ற புரிதலில் கூறவே முயற்சிக்கின்றேன்.

தமிழ் நாட்டில் வாழும் ஒரு இந்தியக் குடிமகன் என்ற வகையிலும், சீனாவின் முன்னேற்றங்கள் குறித்து மகிழ்ச்சி அடையும் ஒரு இடதுசாரி கருத்துடையவன் என்ற வகையிலும் இது மிகவும் தர்ம சங்கடமான நிலை என்று தான் கூற வேண்டும். சீனா தனது நாட்டிற்கேற்ற வகையில் சோசலிசத்தைக் கட்டி அமைக்க முயற்சிக்கின்றது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அந்த வகையில் உலகில் ஒரு பெரும் மக்கள் பரப்பில் சோசலிசக் கட்டுமானம் முன்னேற்றம் அடைவது உலகெங்கும் உள்ள மூன்றாம் உலக மக்களின் நலனுக்கு நீண்ட கால நோக்கில் நலன் பயப்பது தான் என்பதிலும் எனக்குச் சந்தேகமில்லை.

சீனாவின் பிரசன்னம்3இலங்கையின் வடக்கு நோக்கி நகரும் சீனாவின் பிரசன்னம்: யாரைப் பாதிக்கும்?சீனாவின் எழுச்சியும் அதன் செல்வாக்கும் உலகம் ஒரு ஒற்றைத் துருவ கோளமல்ல என்ற நிலையை உருவாக்கும் என்பதால், மூன்றாம் உலக நாடுகளுக்கும் அது சாதகமான சூழலையே உருவாக்கும் என்றே கருதுகின்றேன். ஆனால் பல பொருளாதாரக் கூறுகளில் இந்தியாவின் நலன்களும், சீனாவின் நலன்களும் போட்டி போடக் கூடியவை என்ற காரணத்தால் அது இந்திய ஒன்றியத்தின் மக்களுக்கும் அதன் வளர்ச்சியடைந்த, முன்னேறிய பகுதியான தமிழ் நாட்டின் மக்களுக்கும் ஒரு இரட்டை நிலையை உருவாக்குகின்றது.

தமிழகத்தின் தொழிற்சாலை உற்பத்தி அரங்குகளான ஜவுளி, பின்னலாடைகள், போக்கு வரத்து சாதனங்கள், அவற்றின் உதிரிப் பாகங்கள், ஜவுளித் தொழில் இயந்திரங்கள், மின்சாரக் கருவிகள், ஏனைய இயந்திரங்கள் என இந்தத் துறைகளில் சீனா ஒரு போட்டியாளர் என்ற வகையில் தமிழ் நாட்டின் மக்களுக்கு சீனா ஒரு போட்டியாளர். எம்மைக் காட்டிலும் மிக வலுவான போட்டியாளர் தான் என்றாலும், நாங்கள் இதுகாறும் சமாளித்து, களத்தில் இருப்பவர்கள்தான் என்ற வகையில், சீனாவின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இது தவிர, தகவல் தொழில் நுட்பம், அது சார்ந்த தொழிலரங்கு ஆகியவற்றில் ஒரு வலுவான இடத்தில் இருக்கும் தமிழ் நாடு, சிறீலங்காவில் சீனாவின் செயற்பாடு களைக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

சீனாவின் பிரசன்னம்இது தவிர உலக அரசியல் அரங்கில் அமெரிக்கா எடுக்கும், சீனாவைக் கட்டுப் படுத்தும் முயற்சியில் ஒரு இளைய பங்காளியாக இந்தியாவைக் கொண்டு சேர்க்கும் இந்தியாவின் ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகள், சீனாவின் எதிர் நடவடிக்கை களைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வடக்கே பாகிஸ்தான் தெளிவான சீன ஆதரவு – இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்பது தெளிவு. வங்கதேசம்,நேபாளம், பர்மா ஆகியவை இரண்டு பெரும் அரசுகளுக்கு இடையில் கயிற்றில் நடக்கும் வேலையைச் செய்ய வேண்டியிருக்கும். இந்தியாவின் வரலாற்று பூர்வமான மதம், கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையிலான உறவு என்பதற்கும், நவீன உலகில் சீனாவின் அபரிமிதமான பொருளாதார பலம் என்பதற்கும் இடையிலான இழுபறி இந்த நாடுகளில் நடக்கும் என எதிர் பார்க்கலாம்.

சீனாவின் பிரசன்னம்5இந்த சட்டகத்திற்குள் தான் சீன, சிறீலங்கா உறவையும் வைத்துப் பார்க்க வேண்டி யுள்ளது. இந்திய ஒன்றியத்திற்கு எதிரான சீனாவின் நிலப்பரப்பு சார் அரசியல் நகர்வுகளில்  தமிழ் நாடும் பாதிக்கப் படும் அபாயம் உள்ளது என்று தான் கருத வேண்டி யுள்ளது. சிறீலங்காவின் சிங்கள  ஆதிக்க அரசு, தனது நாட்டின் இரண்டாவது தேசிய இனத்தின் சகோதரர்கள் பெரும் எண்ணிக்கையில் 30 கி.மீ தொலைவில் இருக்கின்றார்கள் என்ற உறுத்தலை எப்போதும் கொண்டிருக்கும். அவர்கள் கடந்த காலத்தின் குழப்பங்கள் தவறுகளின் காரணமாக அந்நியப் பட்டு பாரமுகம் கொண்டது போலவே, காலங் காலமாக இருப்பார்கள் என நம்ப முடியாது எனக் கருதுவார்கள் என்பதில் ஐயம் இல்லை. அதனைக் கணக்கில் கொண்டே சிறீலங்கா அரசு நடவடிக்கைகள் எடுக்கும் என்பதிலும் ஐயம் இல்லை. அதனைப் பொறுத்தும் தமிழ் நாட்டின் நடவடிக்கைகளும் இந்திய ஒன்றிய அரசின் நடவடிக் கைகளும் இருக்கும்.

தமிழ் நாட்டு மக்களும் சரி, ஈழத்தமிழ் மக்களும் சரி சென்ற காலங்களில் போலல்லாது, சர்வதேச அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்களாகவும் கூர்மதி யோடும், நிதானத் தோடும் எதார்த்தங்களை கணக்கில் கொள்பவர்களாகவும் இதனை எதிர் கொண்டு செயலாற்றினால், தமிழ் மக்களின் நலனைப் பாதுகாக்கலாம். மேம்ப டுத்தலாம்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 இலங்கையின் வடக்கு நோக்கி நகரும் சீனாவின் பிரசன்னம்: யாரைப் பாதிக்கும்?