Tamil News
Home செய்திகள் உலக நாடுகளில் 50 இரகசிய காவல் நிலையங்களை அமைக்கும் சீனா

உலக நாடுகளில் 50 இரகசிய காவல் நிலையங்களை அமைக்கும் சீனா

உலகில் உள்ள 21 நாடுகளில் 54 காவல் நிலையங்களை சீனா இரகசியமாக அமைத்துவருவதாக ஸ்பெயினை தளமாகக் கொண்ட அரச சார்பற்ற ளுயகநபரயசன னுநகநனெநசள என்னும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெருமளவான காவல்நிலையங்கள் ஐரோப்பிய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்பெயினில் 9 இத்தாலியில் 4 இலண்டனில் 2 மற்றும் ஸ்கொட்லாந்தில் 1 அயர்லாந்தில் 1 என காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாகனக் ஓட்டுனர் அனுமதிப்பத்திர நீடிப்பு சட்டப்பிரச்சனை மற்றும் குற்றச்செயல்கள் போன்ற சீன மக்களின் பிரச்சனைகளை கையாளுவதற்காக இந்த அலுவலகங்களை அமைத்துவருவதாக சீனா தெரிவித்துள்ளது.

ஆனால் சீன அரசுக்கு எதிராக செயற்படும் சீன பிரஜைகளை கண்காணிப்பதற்காகவே இவை அமைக்கப்படுவதாக அரச சார்பற்ற நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. அதனை மறுத்துள்ள சீனா இந்த அலுவலகங்கள்; குற்றச்செயல்களை தடுக்கவே அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே இது ஒரு சட்டவிரோத நடவடிக்கை என தெரிவித்துள்ள நெதர்லாந்து அரசு இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. அமெரிக்கா கனடா  ஸ்பெயின் அயர்லாந்து மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version