கொங் கொங் விவகாரம் சீனாவுக்கும் – மேற்குலகத்திற்குமிடையிலான அடுத்த கட்ட மேதலுக்கான பாதை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

கோவிட் -19 விவகாரம் அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையிலான மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது கொங் கொங் விவகாரம் அதனை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் இருந்த கொங் கொங் நாடு சீனாவிடம் 1997 ஆம் ஆண்டு கையளிக்கப்பட்டபோது ஒரு நாடு இரு நிர்வாகம் என்ற ஒப்பத்தத்தின் அடிப்படையில் கையளிக்கப்பட்டிருந்தது. சீனாவின் கீழ் இருக்கும் இந்த நிர்வாகமானது 50 வருடங்கள் மட்டுமே செல்லுபடியானது. அதன் பின்னர்  தனிநாடாக பிரிந்து செல்ல கொங் கொங் உரித்துடையது. எனினும் சீனா அதனை அனுமதிக்குமா என்ற அச்சம் அமெரிக்காவுக்கு உண்டு.

எனினும் தாய்வானுக்கு அண்மையில் தென்சீனக் கடலின் முக்கிய கேந்திரப் புள்ளியில் அமைந்துள்ள கொங் கொங்கை தனிநாடாக மாற்றுவதன் மூலம் சீனாவின் கொல்லைப்புறத்தில் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்த மேற்குலகம் விரும்புகின்றது. எனவே தான் அங்கு உள்ள அமைப்புக்களை ஊக்குவித்து தனிநாட்டுக் கோரிக்கையை வலுப்படுத்திவருகின்றன.

ஆனால் இந்த நகர்வைக் கட்டுப்படுத்த சீனா தனது நடவக்கைகளை காலத்திற்கு காலம் இறுக்கிவந்தாலும், தற்போது மிகவும் தீவிரமான நடவடிக்கையில் அது இறங்கியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் கடந்த மாதம் 30 ஆம் நாள் கொண்டுவரப்பட்ட புதிய பாதுகாப்புச் சட்டமாகும்.

இந்த சட்டத்தின் பிரகாரம், பிரிவினையை கோருவது, பயங்கரவாத நடவடிக்கைகள், வெளிநாடுகளுடன் அல்லது அமைப்புக்களுடன் சட்டவிரோத தொடர்புகளை பேணுவது என்பன தடைசெய்யப்பட்டுள்ளது.

hong kong 4 கொங் கொங் விவகாரம் சீனாவுக்கும் - மேற்குலகத்திற்குமிடையிலான அடுத்த கட்ட மேதலுக்கான பாதை - வேல்ஸ் இல் இருந்து அருஸ்சீனாவின் இந்த சட்டம் அமெரிக்காவின் திட்டத்திற்கு பலத்த அடியாக வீழ்ந்ததால் அமெரிக்கா உட்பட மேற்குலகம் அதிக சினமடைந்துள்ளன. கொங் கொங் இல் ஜனநாயகம் வேண்டும் என குரல்கொடுத்துவரும் அமைப்புக்களும், கடந்த 1 ஆம் நாள் கொங் கொங்கில் இந்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தனிநாட்டுக் கோரிக்கைக்கான கொடியை தாங்கியவர் உட்பட 370 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவின் புதிய சட்டமானது கொங் கொங்கில் உள்ளவர்களின் நடவடிக்கையை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கையை மேற்கொள்வதற்கான உத்தரவை கொங் கொங் அரசுக்கு வழங்கும் அதிகாரம் கொண்டது.

சீனாவின் நடவடிக்கை என்பது ஒரு நாடு, ஒரு நிர்வாகம் என்ற அடிப்படையை கொண்டது என அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளதுடன், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திய சீனா அதிகாரிகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கொங் கொள் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டமூலத்தையும் அமெரிக்காவின் காங்கிரஸ் சபை நிறைவேற்றியுள்ளது.

Boriss Johnson கொங் கொங் விவகாரம் சீனாவுக்கும் - மேற்குலகத்திற்குமிடையிலான அடுத்த கட்ட மேதலுக்கான பாதை - வேல்ஸ் இல் இருந்து அருஸ்சீனாவுக்கு எதிராக தனது எதிர்ப்பை தெரிவித்த பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கொங் கொங்கில் உள்ள 3 மில்லியன் பிரித்தானிய கடவுச்சீட்டுள்ள மக்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கவும் முன்வந்துள்ளார். பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கை தொடர்பில் சினமடைந்துள்ள சீனா, தகுந்த பதிலடி வழங்கப்படும் என எச்சரித்துள்ளதுடன் தனக்கு ஆதரவான நாடுகளையும் கியூபா தலைமையில் தயார்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சீனாவின் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரரித்து அறிக்கை வெளியிட்டுள்ள கியூபா அதற்கு ஆதரவாக 53 நாடுகளையும் அணிதிரட்டியுள்ளது. அதில் 15 ஆபிரிக்க நாடுகள் உள்ளன. பிரித்தானியாவின் சீனாவுக்கு எதிராக நடவடிக்கைக்கு ஆதரவாக 27 நாடுகளே கையை தூக்கியுள்ளன. அவற்றில் பல ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள்.

ஐரோப்பிய நாடுகளிலும் பல அரை மனதுடன் தான் ஆதரவு தந்துள்ளதாக அனைத்துலக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதாவது கடந்த 5 வருடங்களில் ஆபிரிக்காவில் உள்ள பல நாடுகளை பிரித்தானியா சீனாவிடம் இழந்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

கியூபாவின் நடவடிக்கை என்பது உலக ஒழுங்கில் ஏற்பட்டுள்ள பிரிவினையை தெளிவாக்கட்டுகின்ற அதேசமயம், ஆசியப் பிரந்தியத்தில் ஆயுதப்போட்டியியையும் விரிவுபடுத்தியுள்ளது.

தனது பாதுகாப்பு செலவீனத்திற்கு மேலும் 270 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது அவுஸ்திரேலியா, நீண்டதூர ஏவுகணைகள், சைபர் தாக்குதல் பாதுகாப்பு பொறிமுறைகள் என்பவற்றை மேம்படுத்தப்போவதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்கொட் மொறிசன், அமெரிக்க கடற்படையிடம் இருந்து கப்பல்களை தாக்கி அழிக்கும் 200 நீண்டதூர ஏவுகணைகளையும் கொள்வனவு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். அதன் பெறுமதி 800 மில்லியன் டொலர்களாகும்.

அவுஸ்திரேலியாவின் இந்த நடவக்கை என்பது இந்திய பசுபிக் பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர் பதற்றத்தின் அறிகுறியாகும் என அவுஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தலைவர் றோறி மெட்கவ் தெரிவித்துள்ளார்.

சீனாவின் தற்போதைய நடவடிக்கையை தொடர்ந்து கொங் கொங்கில் இயங்கிவந்த 3 இற்கு மேற்பட்ட அமைப்புக்கள் தாம் தமது அமைப்பை கலைத்துள்ளதாக தெரிவித்துள்ளன. இந்த அமைப்புக்கள் தனநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து ஜனநாயகப் போராட்டங்களை மேற்கொண்டுவந்தவையாகும்.

Zheng கொங் கொங் விவகாரம் சீனாவுக்கும் - மேற்குலகத்திற்குமிடையிலான அடுத்த கட்ட மேதலுக்கான பாதை - வேல்ஸ் இல் இருந்து அருஸ்இதனிடையே, 2011 ஆம் ஆண்டு வூகான் நகரத்தில் ஏற்பட்ட கலவரத்தை தனது கடுமையான நடவடிக்கைகள் மூலம் அடக்கிய செங் ஜன்ஜியாங் என்பவரை சீனா தற்போது கொங் கொங் இன் புதிய பாதுகாப்புத் துறை தலைவராக நியமித்துள்ளது.

அதாவது சீனாவுக்கும் மேற்குலகத்திற்கும் இடையிலான முரன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், உலக ஒழுங்கிலும் இரு தரப்புக்கும் ஆதரவான அணிகள் உருவாகி வருகின்றன. ஆசியப் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு உருவாகிவரும் இந்த முனைவாக்கம் ஆசியாவில் உள்ள பல நாடுகளின் தலைவிதிகளை மாற்றி எழுதும் வல்லமை கொண்டதாகவே எதிர்காலத்தில் இருக்கப்போகின்றது.

அங்கு ஒரு அமைதி ஏற்படுவது என்பது விரைவில் சாத்தியமற்றது என்பதையே அண்மைய சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அதற்கு சிறந்த மற்றுமொரு உதாரணமாகவே இந்தியாவுக்கும் – சீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற அண்மைய மோதல்களும் அமைந்திருந்தன.

எனவே சிறீலங்கா அரசின் நிலையும் ஒரு மிகவும் நெருக்கடியான கட்டத்திற்குள் தான் எதிர்காலத்தில் தள்ளப்படும் சாத்தியங்கள் உள்ளன. அதன் விளைவுகள் என்ன என்பதை தமிழ் தரப்புக்கள் நன்கு ஆய்வு செய்து அதற்கு ஏற்ப தம்மை தயார்ப்படுத்துவது தற்போதைய தேவையாகின்றது.