Tamil News
Home செய்திகள் இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்திற்கு சீனா உதவியது

இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்திற்கு சீனா உதவியது

இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சாம்பியா, கானா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை அடைய சீனா தனது பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று சீனாவின் புதிய உயர்மட்ட பொருளாதார அதிகாரி லி கியாங்கிடம் ஜோர்ஜீவா கோரிக்கை விடுத்துள்ளார்.

மெரிடியன் ஹவுஸ் மற்றும் பொலிட்டிகோ நடத்திய ஒரு நிகழ்வில், உரையாற்றிய ஜோர்ஜீவா, கடன்களை கையாள்வதற்கு சீனா பல நிறுவனங்களைக் கொண்டுள்ளமையால், தாமதங்கள் ஏற்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சீனா தமது பங்கேற்பை விரைவுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ளதாக ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

Exit mobile version