Tamil News
Home செய்திகள் நிதி நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு சீனா உதவும் -மகிந்தவிடம் சீனா உறுதி

நிதி நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு சீனா உதவும் -மகிந்தவிடம் சீனா உறுதி

பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் அதிக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு இலங்கைக்கு சீனா ஆதரவளிக்கும் என சீனாவின் பிரதமர் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான தொலைபேசி உரையாடலின் போது உறுதியளித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

“நீங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்களை சீனா உணர்கின்றது.மேலும் உங்கள் நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு எங்களால் முடிந்த உதவியை செய்ய விரும்புகின்றோம்” என்றும் சீனாவின் பிரதமர் இந்த தொலைபேசி உரையாடலில் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள சில அவசர நிதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசுடன் சீனா இணைந்து செயற்படும் என்றும் சீனப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு உறுதியளித்துள்ளார்.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான விரைவான கண்காணிப்புப் பேச்சுகள், சீனாவுடனான இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைத்தல் மற்றும் சூழ்நிலை அனுமதிக்கும்போது அதிகமான சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் போன்றவை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளாதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version