Home செய்திகள் சீனாவினால் இலங்கைக்கு 2,000 தொன் அரிசி அன்பளிப்பு

சீனாவினால் இலங்கைக்கு 2,000 தொன் அரிசி அன்பளிப்பு

2000 தொன் அரிசி அன்பளிப்பு

2000 தொன் அரிசி அன்பளிப்பு

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க சீன அரசாங்கம் 2,000 தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்க தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவிப்பு விடுத்துள்ளது.

சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70 ஆண்டு வருட நிறைவு இவ்வருடம்  நினைவுகூரும் வகையில், இந்த அன்பளிப்பு வழங்கப்படுவதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

போக்குவரத்து செலவு உள்ளிட்ட இதன் மொத்த பெறுமதி 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். COVID-19 தொற்று பரவல் மற்றும் சர்வதேச அளவிலான மாற்றங்கள் காரணமாக, உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நிலைமைகள் என்பன பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக சீன தூதரகம் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த நிலைமைகளின் கீழ் இரண்டு நாடுகளின் தொழில்நுட்ப குழுக்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடி, உற்பத்தி மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளை மிக விரைவில் மேற்கொள்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சீனா தொடர்ந்தும் இலங்கையின் சமூக பொருளாதார ரீதியிலான அபிவிருத்திக்கு தம்மால் இயன்றளவு உதவிகளை மேற்கொள்ளும் என சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version