Tamil News
Home செய்திகள் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை இரத்து செய்யப்போவதாக சீனா அறிவிப்பு

சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை இரத்து செய்யப்போவதாக சீனா அறிவிப்பு

ஜனவரி 8-ம் திகதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை இரத்து செய்யப்போவதாகவும், சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்கப்போவதாகவும் சீன அரசு அறிவித்து உள்ளது.

சீனாவில் வூஹான் நகரில் 2019-ல் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இந்த வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. அங்கு நாள்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சீனா விதித்தது. எல்லைகள் மூடப்பட்டநிலையில், கொரோனா வைரஸ்தொற்று பாதிப்பை அந்நாட்டு அரசு சுகாதாரப் பட்டியலில் ‘‘ஏ’’ பிரிவில் வைத்திருந்தது.கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வந்தது.

இதன்படி, வெளிநாட்டில்இருந்து வரும் பயணிகள் அரசுவிடுதிகளில் 2 வாரம் கட்டாயமாகத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருந்தது. இதுபடிப்படியாக 3 நாள்கள் கண்காணிப்புடன் ஐந்து நாட்களாகக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச எல்லைகளை மீண்டும் திறந்து, தனிமைப்படுத்துதலையும் இரத்துசெய்யப்போவதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 8-ம் திகதி முதல் இது அமலுக்கு வரப் போவதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version