Home உலகச் செய்திகள் உய்கர் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ததாக சீனா மீது குற்றச்சாட்டு-அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம்

உய்கர் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ததாக சீனா மீது குற்றச்சாட்டு-அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம்

சீனா மீது குற்றச்சாட்டு

ஷின்ஜியாங்கில் உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக, பிரிட்டனில் அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம் மேற்கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

உய்கர் மக்களுக்கு எதிராக சீன அரசு கருத்தடை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே, இந்த முடிவுக்கு வருவதற்கான முதன்மைக் காரணம் என, அத்தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

சீனா மீது குற்றச்சாட்டு தொடர்பாக சர்வதேச சமூகம் வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, லித்வானியா ஆகிய நாடுகள் சீனாவை குற்றம்சாட்டி, தங்கள் பாராளுமன்றங்களில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

ஆனால், பிரிட்டன் அரசு, சீனா இனப்படுகொலை செய்ததாக குற்றம்சாட்ட மறுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version