Home செய்திகள் சீனாவுடன் மட்டுமன்றி இந்தியாவுடனும் எச்சரிக்கை வேண்டும்: விக்கினேஸ்வரன்

சீனாவுடன் மட்டுமன்றி இந்தியாவுடனும் எச்சரிக்கை வேண்டும்: விக்கினேஸ்வரன்

இந்தியாவுடனும் எச்சரிக்கை வேண்டும்

சீனாவுடன் மட்டுமல்லாமல் இந்தியாவுடனும் எச்சரிக்கை வேண்டும். இல்லையேல், வருங்காலத்தில் இலங்கை பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய – சீனா முரண்பாடு வருங்காலத்தில் இது எம்மைப் பாதிக்கும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வல்லரசுப் பிரச்சினைகள் – முரண்பாடுகள் – எதிர்பார்ப்புகள் சிறிய நாடான இலங்கைக்கு பெரும் பிரச்சினைகளை உருவாக்கவுள்ளன. இந்த அரசாங்கம் ஒருவரை மற்றொருவருக்கு எதிராக தூண்டி விடுகிறது.

ஒரு இலட்சம் கோடி ரூபா பெறுமதியான உதவிகள் சீனாவிடம் இருந்து கிடைக்கின்றன. இந்தியாவுடன் தமிழ் மக்களுக்கு மொழி, மத, கலாசார ரீதியான தொடர்புள்ளது. இந்தத் தொடர்புகளைப் பாதிக்கும் வகையில் வடக்குக்கான சீன விஜயம் அமைந்துள்ளது. இந்த வருகையை நல்ல விதத்தில் பார்க்கவில்லை.

சீனா மட்டுமல்ல யாராக இருந்தாலும் அவர்கள் தமது சொந்த நலன்களுக்கே வருவார்கள் – தருவார்கள்.

இதனால், சீனாவுடன் மட்டுமல்லாமல் இந்தியாவுடனும் கவனமாக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இல்லையேல், வருங்காலத்தில் இலங்கை பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும்” என்றார்.

Exit mobile version