Tamil News
Home செய்திகள் வடக்கில் கால்நடைகளுக்கு பரவிவரும் நோய்

வடக்கில் கால்நடைகளுக்கு பரவிவரும் நோய்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகள் மத்தியில் பரவி வரும் நோய் லம்பி ஸ்கின் நோய் (Lumpy Skin Disease) எனப்படும் வைரஸ் நோய் என விவசாய அமைச்சின் கால்நடைப் பிரிவு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இந்நாட்களில் கால்நடைகளுக்கு ஒருவித தோல் நோய் வரவு வருகின்றன.

இந்த நோய் நிலைமையை உடனடியாக ஆராயுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கால்நடை அபிவிருத்தி பிரிவுக்கு இன்று (07) பணிப்புரை விடுத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முறையாக இந்த நோய் நிலை பதிவாகியுள்ளதாகவும் அதற்கு முன்னர் இந்நாட்டில் இந்த நோய் நிலை பதிவாகவில்லை எனவும் டொக்டர் என்.சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார் .

Exit mobile version