அட்லாண்டிக் பெருங்கடலில் சென்ற சரக்குக் கப்பலில் தீ: கருகும் 4000 சொகுசு கார்கள்

சரக்குக் கப்பலில் தீ

அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 4,000 சொகுசுக் கார்களை(மகிழூந்து) ஏற்றிச்சென்ற ஃபெலிசிட்டி ஏஸ் (Felicity Ace) என்ற சரக்குக் கப்பலில் தீப்பிடித்துக் கொண்டது. கப்பல் 22 ஊழியர்களுடன், ஜெர்மனியிலிருந்து அமெரிக்கா சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கப்பலில் வோல்ஸ்வேகன் (Volkswagen), லம்போர்கினி (Lamborghini), போர்ஷே (Porsches), ஆடி (Audi) உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு ரகக் கார்கள் இருந்தன.

போர்ச்சுகலின் அசோர்ஸ் (Azores) தீவுக்கு அருகே கப்பல் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த மீட்புப்படையினர் 22 கப்பல் ஊழியர்களைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.