கட்சி ரீதியாக எவருடனும் இணையமுடியாது – சி.வி.விக்னேஸ்வரன் கருத்து

கட்சி ரீதியாக இரா.சம்பந்தனுடனோ அல்லது மாவை சேனாதிராஜாவுடனோ சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

இம்முறை மான் சின்னத்தில் களமிறங்குகின்றோம். இதனுடைய முக்கியத்துவம் யாதெனின் மான் சின்னம் முதல் முதல் தேர்தலில் கலந்துகொள்கின்றது. இந்த தேர்தலில் மான் சின்னத்தில் எமது வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

எனவே தேர்தல் நடவடிக்கைகளின் போது மக்களை எவ்வாறு கவர வேண்டும், மக்களுடன் எவ்வாறு இணைந்து செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் தேவையான நேரங்களில் தம்முடன் இணைந்து செயற்படலாம்.  கடந்த காலங்களில் சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராசா போன்றோர் முக்கிய சந்தர்ப்பங்களில் இணைந்து பயணித்திருந்ததாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரதின கொண்டாங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன்,

தன்னைப் பொறுத்தவரை 1958 இல் சுதந்திர தின அணிவகுப்பு அணியில் இணைந்ததாக குறிப்பிட்டார்.

அதன் பின் இதுவரை சுதந்திர தினங்களில் கலந்தகொள்வதில்லை. ஏனெனில் தமிழர்களுக்கு சுதந்திரம் இதுவரை கிடைக்கவில்லை.

இனியும் எமக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அந்த வகையில் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்புப் பேரணியை வரவேற்பதாக சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்திருந்தார்.