Home உலகச் செய்திகள் கொல்லப்பட்ட பழங்குடி மக்களை கனேடிய அரசு நினைவு கூர்ந்தது

கொல்லப்பட்ட பழங்குடி மக்களை கனேடிய அரசு நினைவு கூர்ந்தது

உண்மை மற்றும் நல்லிணகத்திற்கான தேசிய நாளை கடந்த வியாழக்கிழமை (30) கனேடிய அரசு நினைவு கூர்ந்தது. கனடாவில் நடைமுறையில் இருந்த தங்குமிடப் பாடசலைகளில் கொல்லப்பட்டவர்களை மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதே இந்த நாளின் முக்கியத்துவமாகும்.

இந்த பாடசாலைகளில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பலவந்தமாக கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டதுடன், அவர்களில் ஆயிரக்கணக்கானோர் படுகொலையும் செய்யப்பட்டிருந்தனர்.

பெருமளவான புதைகுழிகள் இந்த வருடமும் கண்டறியப்பட்டுள்ளது. இது கனேடிய மக்களிடம் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. செவ்வண்ண உடை அணிந்து நினைவுகூரும் இந்த நாளை கனேடிய அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.

எனது உடைகள் அகற்றப்பட்டு செவ்வண்ண உடைகள் தரப்பட்டன, எனது தலைமுடி வெட்டப்பட்டது, பல சிறுவர்கள் அழுதவாறு காணப்பட்டனர் என இந்த பாடசாலையில் இருந்து உயிர்தப்பிய பிலிஸ் வெப்ஸ்ரட் தெரிவித்துள்ளார்.

இந்த பாடசாலையின் துன்பநிகழ்வுகள் தொடர்பில் கனேடிய மக்கள் தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் 140 அரச மற்றும் தேவாலயங்களால் நிர்வகிக்கப்பட்ட பாடசாலைகள் இயங்கி வந்திருந்தன. அதில் 150,000 சிறுவர்கள் பலவந்தமாக கொண்டு வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு கொண்டு வரப்பட்ட சிறுவர்களில் பெருமளவானவர்கள் துன்புறுத்தப்பட்டதுடன், பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுப் பாடசாலை வளாகங்களில் புதைக்கப்பட்டிருந்தனர். 215 இற்கு மேற்பட்ட புதைகுழிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ilakku-weekly-epaper-150-october-03-2021

Exit mobile version