கறுப்பு ஜூலை நினைவேந்தல் – தமிழர்களுக்கு ஆதரவாக கனடா இருக்கும் – எரின் ஓ’டூல் கருத்து

erin otoole கறுப்பு ஜூலை நினைவேந்தல் – தமிழர்களுக்கு ஆதரவாக கனடா இருக்கும் - எரின் ஓ’டூல் கருத்து

இலங்கையில் நடைபெற்ற அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானோரை பொறுப்பேற்குமாறு  வலியுறுத்துவதில் கனடா வலிமையாக கட்டாயம் இருக்கும் என  அந்நாட்டின் உத்தியோகபூர்வ எதிர்க் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலை  நினைவாக மேலும் கனடாவின் உத்தியோக பூர்வ எதிர்க் கட்சியின் தலைவர் மாண்புமிகு எரின் ஓ’டூல்  கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கையில் கடந்த 1983ம் ஆண்டு ஜூலை  மாதம்  நடந்த தமிழ் விரோத, இன சுத்திகரிப்பு முயற்சியின் அங்கமாக ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இதன் காரணமாக ஐந்து இலட்சம் தமிழர்கள் இலங்கைத் தீவை விட்டு வெளியேறிய போது, அதில் பலர் கனடாவுக்கு அகதிகளாக வந்தனர். கனடாவில் உள்ள தமிழர்கள் இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடு கின்றனர்.

தமிழ்  சமூகமானது உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் தமது சுதந்திரம் மற்றும் நீதியின் பாதுகாப்பிற்கு கனடா நாட்டின் அர்ப்பணிப்பை ஆழமாக புரிந்து கொண்டிருக்கின்றது. நாங்கள் உலகம் முழுதும் உள்ள மனித உரிமை மீறல்களை கண்டிப்பதில் எப்போதும் முன்னிற்போம்.

மேலும் Magnitsky sanctions தடைகளை விதிக்குமாறு கனடா அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்துவோம். கனடாவானது அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானோரை பொறுப்பேற்குமாறு  வலியுறுத்துவதில் வலிமையாக கட்டாயம் இருக்கும்.

இந்நிலையில், கனடாவின் (Conservatives) பழமை வாத கட்சியினர் துயரமான கறுப்பு ஜூலை நிகழ்வுகளை நினைவு கூருவதில் தமிழர்களோடு நிக்கிறோம். இந்த முக்கியமான நினைவுகூரும் மாதத்தில் அனைத்து கனடியர்களும் பங்கேற்றுமாறு  அழைப்பு விடுக்கின்றோம். ” என்றார்

ilakku-weekly-epaper-140-july-25-2021