Home உலகச் செய்திகள் ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளைத் தனது மண்ணில் குடியமர்த்தும் கனடா

ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளைத் தனது மண்ணில் குடியமர்த்தும் கனடா

ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளை

ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளையும் அவர்களது குடும்பங்களையும் தனது மண்ணில் குடியேற அனுமதிக்கவுள்ளதாகக் கனடா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய பிறகு கிரீஸில் வசிக்கும் அவர்கள், நிச்சயமற்ற சூழலில் இருந்து வருகின்றனர். ஆப்கானிய அகதிகள் 40,000 பேரை மறுகுடியமர்த்த கனடா உறுதி அளித்திருந்தது.

ஆனால், இதுவரை அவர்களில் 16 விழுக்காட்டினரை மட்டுமே அது ஏற்றுக்கொண்டுள்ளது. நீதிபதிகள், அவர்களது குடும்பத்தார் எனச் சுமார் 230 பேரைத் தவிர்த்து ஆப்கானியக் குடிமக்களில் மற்ற சில தரப்பினரையும் மறுகுடியமர்த்த கனடா உறுதி கூறியுள்ளது.

Exit mobile version