Home உலகச் செய்திகள் ரஸ்யாவில் இடம்பெறும் மாநாட்டில் கலந்துகொள்ள தலிபான்களுக்கு அழைப்பு

ரஸ்யாவில் இடம்பெறும் மாநாட்டில் கலந்துகொள்ள தலிபான்களுக்கு அழைப்பு

தலிபான்களுக்கு அழைப்பு

எதிர்வரும் வாரம் ரஸ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெறும் ஆப்கானிஸ்தான் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்கு தலிபான்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் கலந்துகொள்ள தலிபான்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஆப்கானுக்கான ரஸ்யாவின் சிறப்பு பிரதிநிதி சமீர் கபுலோவ் கடந்த வெள்ளிக்கிழமை (15) தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் மாநாட்டில் பங்குகொள்ளும் ஏனைய உறுப்பு நாடுகளுக்கு தெரிவிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதமும் ரஸ்யா ஆப்கான் தொடர்பான மாநாடு ஒன்றை நடத்தியிருந்தது. அதில் அமெரிக்கா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்குபற்றியிருந்தன.

அதன் பின்னர் அமெரிக்கத் துருப்புகள் ஆப்கானில் இருந்து வெளியேறியிருந்ததுடன், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியிருந்தனர். எனினும் தனது நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் ரஸ்யா தற்போது கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றிய பின்னர், ரஸ்யப் படையினர் தஜிகிஸ்த்தான் பகுதியில் பாரிய படை ஒத்திகை ஒன்றை நடத்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version