‘CAA சட்டம் இலங்கைத் தமிழருக்கு விதிக்கப்பட்ட மாபெரும் துரோகம்’ தமிழக முதலமைச்சர் கருதது

CAA சட்டம் இலங்கைத் தமிழருக்கு மாபெரும் துரோகம்

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டசட்டமான CAA சட்டம் இலங்கைத் தமிழருக்கு மாபெரும் துரோகம் எனவும் (Citizenship (Amendment) Act) அதனை இரத்துசெய்யக் கோரி,  தனித் தீர்மானம் ஒன்றை  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சட்டமன்றத்தில் கொண்டுவந்துள்ளார்.

CAA சட்டத்தை இரத்துசெய்யக் கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தனித் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு முன்பாகவே, அ.தி.மு.க  சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது.

இந்நிலையில், தீர்மானம் குறித்துப் உரையாற்றிய  முதலமைச்சர் ஸ்டாலின், “ஒன்றிய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கும், நாட்டில் நிலவிவரும் மத நல்லிணக்கத்துக்கும் உகந்ததாக இல்லை என்றே இந்தப் பேரவை கருதுகிறது.

மக்களாட்சி அடிப்படையில் ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது, அந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கருத்தையும் உணர்ந்து அமைந்திருக்க வேண்டும். ஆனால், இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம், வெளிநாட்டிலிருந்து அகதிகளாக வரும் மக்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல், மத அடிப்படையிலும், அவர்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொறுத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

எனவே, இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மதச்சார்பின்மை கோட்பாட்டை நிலைநிறுத்தவும் ஒன்றிய அரசின் குடியுரிமைச் சட்ட திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும் என தமிழக சட்டப்பேரவை வலியுறுத்துகிறது. மேலும் இந்த CAA சட்டம் இலங்கைத் தமிழருக்கு விதிக்கப்பட்ட மாபெரும் துரோகம்’’  என்றார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021