பயங்கரவாத தாக்குதல் அபாயம் இலங்கையில் குறைந்துள்ளதாக பிரிட்டன் தெரிவிப்பு

ec2a3fef3fc14b718657f1c7a2b2c77e 18 பயங்கரவாத தாக்குதல் அபாயம் இலங்கையில் குறைந்துள்ளதாக பிரிட்டன் தெரிவிப்பு

இலங்கையில் பயங்கரவாதிகள்  தாக்குதல்களை நடத்த முயற்சிக்கும் ஆபத்து மிகக் குறைவடைந்துள்ளதாக பிரிட்டன் தனது பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று தங்கும் விடுதிகள் மீது பயங்கர வாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதோடு, 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பிரிட்டன் அதன் பயண ஆலோசனையில் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரித்ததுடன், தங்கும் விடுதிகள் சுற்றுலாத் தளங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற வெளி நாட்டினர் பார்வையிடும் இடங்கள் உட்பட்ட இடங்களில் தாக்குதல்கள் கண் மூடித்தனமாக இருக்கக் கூடும் என்றும் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கும் ஆபத்து மிகக் குறைவு அல்லது குறைவடைந்து வருகிறது என்று பிரிட்டன் அதன் அண்மைய பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021