Home செய்திகள் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு பிரிட்டன் அழுத்தம்

பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு பிரிட்டன் அழுத்தம்

இலங்கை அரசாங்கத்திற்கு பிரிட்டன் அழுத்தம்

இலங்கையில் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசேட அவதானம் செலுத்தியுள்ள பிரிட்டன், அரசாங்கம், போரின் போதும் அன் பின்னரான காலப்பகுதியிலும் நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு பிரிட்டன் அழுத்தம்  வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போதும் பாதுகாப்புப் படையினரால் தமிழர்கள் சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமையை வெளிப்படுத்தும்  வகையில் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் திரட்டப்பட்ட சாட்சியங்களை உள்ளடக்கிய 49 பக்க அறிக்கை ஒன்று “இலக்கை-2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் என்ற தலைப்பில் கடந்த செப்டெம்பர் மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற் திட்டத்தினால் வெளியிடப்பட்டது.

இலங்கையில் பாதுகாப்பு படையினரால் சித்திரவதைக்கு உள்ளான தமிழ் இளைஞர்கள் பிரிட்டனைச் சென்றடைவது குறித்தும் அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளான முறைகள் குறித்தும் அவ்வறிககையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்நிலையில், இலங்கை பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தொடர்பில் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற் திட்டத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் பிரிட்டன் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டின் ஆசியப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அமண்டத மில்லிங், குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மிகுந்த கரிசனையை தோற்றுவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version