நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கு பிரிட்டன் நடவடிக்கை எடுக்கவில்லை- முன்னாள் இராஜதந்திரி பீட்டர் ஹீப் கவலை

இலங்கைக்கு சர்வதேச சமூகம் உதவி வழங்கும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் தலைமை தாங்க வேண்டும் என பிரிட்டனின் ஓய்வு பெற்ற இராஜதந்திரி பீட்டர் ஹீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

கார்டியன்  ஊடகத்தில் வெளிவந்துள்ள இது தொடர்பான செய்தியில்,

இலங்கை நெருக்கடிக்கான பிரிட்டன் அரசாங்கத்தின் பதில் நடவடிக்கை வெக்கக்கேடானது. மக்கள் பட்டினியால் அவதியுறுகின்றனர், மருந்துகள் இன்மையால் உயிரிழக்கின்றனர். போதியளவு எரிபொருள் இல்லாததால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர் மக்கள். மின்சாரத் தட்டுப்பாடு காணப்படுகின்றது என அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

இந்த மக்கள் இந்த நிலைமைக்கு ஏன் தள்ளப்பட்டனர் என்பதற்கு அப்பால்  நெருக்கடிநிலையில் உள்ள நாட்டிற்கு உதவுவதற்கு பிரிட்டன் தலைமை வகிக்க வேண்டும். நாங்கள் அந்த மக்களின் விரும்பமின்றி 150 ஆண்டுகள் அந்நாட்டை ஆட்சி செய்ததைக் கருத்தில் கொண்டு மிக வேகமாக சர்வதேச நிவாரண முயற்சிக்கு தலைமை தாங்க வேண்டும். பொதுநலவாயத்தின் ஊடாக அதனை செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.