Notice: Undefined variable: _SESSION in /home/gi5h742vtw17/public_html/www.ilakku.org/index.php on line 1
மின்,வலுசக்தி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அமெரிக்க திறைசேறி துணை உதவி செயலாளருக்கு விளக்கம் | October 3, 2023
Home செய்திகள் மின்,வலுசக்தி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அமெரிக்க திறைசேறி துணை உதவி செயலாளருக்கு விளக்கம்

மின்,வலுசக்தி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அமெரிக்க திறைசேறி துணை உதவி செயலாளருக்கு விளக்கம்

மின்சக்தி மற்றும் வலுசக்தி துறையில் தற்போது இடம்பெற்று வரும் மறுசீரமைப்புக்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் அமெரிக்க திறைசேரியின் துணை உதவிச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் உள்ளிட்ட குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன் போது கடந்த 12 மாதங்களில் இந்தத் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம், விலை திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் போது எதிர்கொண்ட சவால்கள், இலங்கை மின்சாரசபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் மறுசீரமைப்பு, முன்மொழியப்பட்ட புதிய மின்சாரச் சட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version