ஒமைக்ரானுக்கு எதிரான பேராயுதம் பூஸ்டர் தடுப்பூசி-WHO

ஒமைக்ரானுக்கு எதிரான பேராயுதம்

ஐரோப்பிய பிராந்தியத்தில் அடுத்த அலை வந்து கொண்டிருக்கிறது. ஒமைக்ரானுக்கு எதிரான பேராயுதம் பூஸ்டர் தடுப்பூசி என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஹான்ஸ் க்ளூக் கூறியதாவது:

நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. ஐரோப்பிய பிராந்தியந்தில் 53 நாடுகளில் 38 நாடுகளில் ஒமைக்ரான் பரவியுள்ளது. டென்மார்க், போர்ச்சுகல், பிரிட்டன் போன்ற நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆதிக்க கிருமி என்ற நிலையை எட்டிவிட்டது. இதனால் அடுத்த அலை வருவது கண்கூடாக தெரிகிறது.

இன்னும் சில வாரங்களில் ஒமைக்ரான் உலகின் பல நாடுகளில் பரவிவிடும். ஏற்கெனவே நெருக்கடியில் உள்ள மருத்துவத் துறையை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். கடந்த சில வாரங்களில் ஐரோப்பிய பிராந்தியத்தில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

(உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய பட்டியலில் ரஷ்யா, முன்னாள் சோவித் குடியரசுகள் மற்றும் துருக்கியும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது).

Tamil News