தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு திடீர் பயணம்

357 Views

அண்ணாமலை இலங்கைக்கு திடீர் பயணம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் பிரதம அதிதியாக பங்கேற்கும் பொருட்டு பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 30) இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில் இலங்கைக்கு செல்லும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முதலில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயைச் சந்திக்கவுள்ளார்.

பின்னர், மே தினக் கூட்டத்தினை நிறைவு செய்து கொண்டு அண்ணாமலை வடக்கிற்கான  பயணத்தினை  மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 நாள் பயணத்தின்போது   இலங்கைத் தமிழ் தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.முன்னதாக, ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் உதவுவதற்காக தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply