657 Views
புதுச்சேரியில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்தநாள் பேரணி ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. தேசியத் தலைவர் அவர்களின் 67ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரால் இந்தப் பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
புதுச்சேரி மாநிலத்தில் பாகூர் நகரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் தோழர் அருள்ஒளி ஒருங்கிணைப்பில் 67 தலைவர் படங்களை கையில் தாங்கி, தமிழீழ தேசியக் கொடியுடன் நகரை சுற்றி சிறப்பான பேரணி நடைபெற்றது.