தேனீக்களை தாக்கும் வைரஸ் – உணவு உற்பத்திக்கு மேலும் ஆபத்து

தேனீக்களின் இறகுகளை சேதப்படுத்தும் வைரஸ் கிருமிகள் விரைவாக பரவி வருவதால் உலகில் உள்ள தேனீக்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Deformed wing virus (DWV) எனப்படும் வைரஸ் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அறியப்பட்டாலும், அதன் பிறள்வடைந்த வகை 2001 ஆம் ஆண்டு மீண்டும் நெதர்லாந்தில் கண்டறியப்பட்டிருந்தது.

Varroa Destructor எனப்படும் ஒட்டுண்ணி மூலம் இந்த வைரஸ் தேனீக்களுக்கு கடத்தப்படுவதுடன், இந்த ஒட்டுண்ணிகள் தேனீக்களின் இழையங்களை சாப்பிடும் தகமையும் கொண்டவை என விலங்கியல் பேராசிரியர் றொபேட் பக்ஸ்ரன் தெரிவித்துள்ளார்.

பல பிறள்வடைந்த வகைகளை கொண்ட இந்த வைரஸ்கள் ஐரோப்பாவில் ஏற்கனவே பரவிவிட்டதாகவும், அவுஸ்திரேலியாவை தவிர ஏனைய நாடுகளிலும் அது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே கிருமிநாசினிகளின் பயன்பாடு, காலநிலை மாற்றம் போன்றவற்றால் பத்தில் ஒரு தேனீக்களின் இனங்கள் அழிவைச் சந்தித்துள்ளன. தற்போது வைரசின் தாக்கம் அவற்றை மேலும் பாதிப்பதுடன், அது தாவரங்களின் உணவு உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News