Home செய்திகள் மட்டக்களப்பு- தமிழர்களின் மேய்ச்சல் தரைப்பகுதி தொடர்ந்து அபகரிப்பு  

மட்டக்களப்பு- தமிழர்களின் மேய்ச்சல் தரைப்பகுதி தொடர்ந்து அபகரிப்பு  

மேய்ச்சல் தரைப்பகுதி தொடர்ந்து அபகரிப்பு  

மேய்ச்சல் தரைப்பகுதி தொடர்ந்து அபகரிப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப்பகுதியை வேறு மாவட்டங்களை சேர்ந்த சிங்கள  குடும்பங்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவருவதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப்பகுதியில், கடந்த ஆண்டு நூற்றுக்காணக்கான ஏக்கர் காணிகளை வேறு பகுதிகளை சேர்ந்த சிங்களவர்கள் அபகரித்து பயிர்ச் செய்கையில் ஈடுபட்டமை தொடர்பில் கொழும்பு உச்ச நீதிமன்றில் வழக்கொன்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனால் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கின்போது குறித்த பகுதியில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் அங்கிருந்துசெல்வதற்கு உடன்பட்டு வெளியேறியிருந்தனர்.  குறித்த பகுதியை மேய்ச்சல் தரைப்பகுதியென நீதிமன்றில் சிங்கள மக்கள்(ஆக்கிரமித்திருந்தவர்கள்) சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளே ஏற்றுக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் அப்பகுதியில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அரசாங்க ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் எந்தவித நடவடிக்கையும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லையெனவும் பண்ணையாளர்கள்  குற்றம்சுமத்துகின்றனர்.

Exit mobile version