Tamil News
Home செய்திகள் இலங்கைக்கு உருளைக்கிழங்குகளை அனுப்ப பங்களாதேஷ் ஆலோசனை

இலங்கைக்கு உருளைக்கிழங்குகளை அனுப்ப பங்களாதேஷ் ஆலோசனை

இலங்கைக்கு உருளைக்கிழங்குகளை அனுப்ப பங்களாதேஷ் பரிசீலித்து வருகிறது.

(சார்க்) செயலாளர் நாயகம் எசல ருவான் வீரகோனுடனான சந்திப்பின் போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இந்த உறுதிமொழியை வழங்கினார்.

வீரகோன் பங்களாதேஷ் பிரதமரை கணபாபனில் மரியாதையின் நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு  கொரோனா தொற்றுநோய் தான் காரணம் என்று கூறிய வீரகோன்,   அரிசி உற்பத்தி 50% குறைந்துள்ளதால் இலங்கைக்கு தற்போது உரம் தேவைப்படுவதாக  தெரிவித்தார்.

இந்த நிலையில், பங்களாதேஷ் பாரிய சனத்தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், இந்த நெருக்கடியின் போது இலங்கைக்கு உருளைக்கிழங்கு வழங்கலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version