மாலி மீதான தடை – சீனா, ரஸ்யா கூட்டாக முறியடிப்பு

மாலி மீதான தடை

மாலி மீதான தடை: மேற்கு ஆபிரிக்க பொருளாதாரக் கூட்டமைப்பினால் மாலி மீது கொண்டு வரப்பட்ட பொருளாதாரத் தடையை சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கூட்டாக முறியடித்துள்ளன.

மாலியில் தற்போது ஆட்சியில் உள்ள  படை அதிகாரிகள் மேலும் ஐந்து வருடங்கள் ஆட்சியை தொடர்ந்த பின்னரே தேர்தல் நடத்தப்படும் என அறிவித்த பின்னர்இ அதன் மீது பொருளாதாரத் தடையை கொண்டுவரும் தீர்மானத்தை பிரான்ஸ் வரைந்திருந்தது. கென்யாஇ கானா மற்றும் ஹபோன் ஆகிய நாடுகளின் ஆதரவுடன் அதனை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றும் கூட்டம் ஒன்றை பிரான்ஸ் கடந்த செவ்வாய்க்கிழமை (11) ஏற்பாடு செய்திருந்தது.

மூடிய அறைக்குள் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில்இ ரஸ்யாவும் சீனாவும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை முறியடித்துள்ளன.

ஒரு மாற்றத்தை நோக்கி மாலி தற்போது தான் முன்னேறி வருகின்றது இந்த நிலையில் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் அழுத்தம் அதனை பாதிக்கும் என சீன தெரிவித்துள்ளது. அதனைபோலவே ரஸ்யாவும் மாலி அரசு மீது தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, ரஸ்யாவின் கூலிப்படையினர் மாலி இராணுவ அரசுக்கு உதவி வருவதாக பிரான்ஸின் ஐ.நாவுக்கான தூதுவர் நிகோலஸ் டி றிவிரி குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் அதனை ரஸ்யாவும், மாலிக்கான ஐ.நா தூதுவரும் மறுத்துள்ளனர்.

எம்மீதான பொருளாதாரத் தடை மனிதாபிமானமற்றது என மாலியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய இராணுவ அதிகாரி கேணல் அசிமி கோட்டா தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்போவதாகவும் அது வரையில் இடைக்கால அரசு செயல்படும் எனவும் தெரிவித்த அவர் அதன் பின்னர் கடந்த வருடம் மே மாதம் இடைக்கால அரசையும் கலைத்துள்ளார். அதன் பின்னர் தனது இராணுவ அரசு எதிர்வரும் ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருக்கும் என அவர் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார் Tamil News