அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு கொள்கைகள் மாறாது: அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்

239462750 1399167287122342 8504368353910087481 n அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு கொள்கைகள் மாறாது: அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்

“அவுஸ்திரேலியாவின் வலுவான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகள் மாறவில்லை, மாறப்போவதும் இல்லை. சட்டவிரோதமாக வந்த எவரும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள்,” என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸ் தெரிவித்திருக்கிறார்.

“அவுஸ்திரேலிய அரசு தனது மனிதாபிமான திட்டத்தின் கீழ் 2013 முதல் இதுவரை 8,500 ஆப்கானியர்களுக்கு விசா வழங்கியுள்ளது. இவர்கள் அனைவரும் சட்ட பூர்வமாக ஆவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்கள்,” என உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து தற்போது தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் உள்ள எவருக்கும் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமை வழங்கப்படாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்திருந்தார்.

மேலும் “இந்த விவகாரத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு கொள்கைகள் எதுவும் மாறவில்லை என்ற தெளிவான செய்தியை ஆட்கடத்தல்காரர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்,” என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் குறிப்பிட்டிருக்கிறார்.

அவுஸ்திரேலிய அரச வட்டார தகவல்களில் படி, தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் கீழ் 4,500 ஆப்கானியர்கள் அவுஸ்திரேலியாவில் தற்போது வசித்து வருகின்றனர். ilakku-weekly-epaper-144-august-22-2021