குடியேறிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள அவுஸ்திரேலிய அரசின் முடிவு

குடியேறிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமைப் பெற்ற குடியேறிகள், அந்நாட்டின் முக்கிய மற்றும் அவசியமான நல உதவிகளைப் பெற நான்காண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற அவுஸ்திரேலிய அரசின் முடிவு குடியேறிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப் புதிய திட்டம் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்கும் எண்ணம் கொண்ட வெளிநாட்டினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

670 மில்லியன் டொலர்களை மிச்சப்படுத்தும் நடவடிக்கையாக இக் கொள்கையினை ஸ்காட் மாரிசன் தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021