விமானத்தில் பயணிக்க வாய்ப்பு இருந்திருந்தால் ஏன் கடல் வழியாக வரப்போகிறேன்: ஓர் அகதியின் கடிதம்

asylum detention Al Jazeera விமானத்தில் பயணிக்க வாய்ப்பு இருந்திருந்தால் ஏன் கடல் வழியாக வரப்போகிறேன்: ஓர் அகதியின் கடிதம்“எனது வாழ்க்கையின் எட்டு ஆண்டுகளை அவுஸ்திரேலிய தடுப்பில் நான் கழித்திருக்கிறேன். தாய் நாட்டிலிருந்த அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியதால் எனக்கு இந்த நிலை,” என அந்த அகதி குறிப்பிட்டிருக்கிறார்.

“நான் செய்த ஒரே தவறு, படகு வழியாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தது தான் என்கிறது அவுஸ்திரேலிய அரசு. விமானத்தில் பயணிக்க கூடிய வாய்ப்பு இருந்திருந்தால் நான் ஏன் கடல் வழியாக வரப் போகிறேன். எந்த வாய்ப்பும் இன்றியே படகு வழியாக தஞ்சமடைந்தேன்,” என தனது நிலையை அவுஸ்திரேலிய தடுப்பில் உள்ள அகதி தெளிவு படுத்தியிருக்கிறார்.

இவரைப் போன்ற பல அகதிகள்/ தஞ்சக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் குடிவரவுத் தடுப்பு முகாம், டார்வின் தடுப்பு முகாம், வில்லாவுட் தடுப்பு முகாம், மெல்பேர்ன் தடுப்பு முகாம், மற்றும் பெர்த் தடுப்பு முகாமில் வைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 விமானத்தில் பயணிக்க வாய்ப்பு இருந்திருந்தால் ஏன் கடல் வழியாக வரப்போகிறேன்: ஓர் அகதியின் கடிதம்